இதுதான் இந்தியா.. ஒரே நேரத்தில் இஸ்ரேல், ஈரான், அமெரிக்காவை ஸ்டன் ஆக்கிய யுக்தி.. என்ன நடந்தது?
சென்னை: ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் விவகாரத்தில் இந்தியா தனது பழைய நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. மற்ற உலக நாடுகள் இதில் பதட்டப்பட்டு முடிவுகள், நிலைப்பாடுகள் எடுக்கும் நிலையில் இந்தியா தெளிவோடு செயல்பட தொடங்கி உள்ளது. மற்ற நாடுகளிடம் இல்லாத பெரிய தெளிவு இந்தியாவிடம் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.
ஈரான் இஸ்ரேல் போர்
ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்
உலகப்போர் மூளும் அபாயம்:
இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாக, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 4-வது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஹைஃபா, டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களில் தீ
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. முக்கியமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இங்கே ஏற்பட்ட சேதங்கள் பகல் நேர வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆரம்ப கட்ட தகவல்களின்படி, ஹைஃபாவில் உள்ள ஒரு ஜெப ஆலயம் சேதமடைந்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள பென் குரியன் விமான நிலையமும் கடுமையாக சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் முற்றி உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக நேற்று இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் சாதாரணமாக செய்யவில்லை. முறையாக திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இது வெறுமனே கோபத்தில் கொடுக்கப்பட்ட பதிலடி அல்ல.
இஸ்ரேலிடம் ஏவுகணைகளை மறித்து தாக்கும் அயர்ன் டோம் உள்ளது. அதாவது ஒரு ஏவுகணை உள்ளேவந்தால் .. அதை உடனடியாக இந்த அயர்ன் டோம் இடைமறித்து ஏவுகணை மறித்து வெடிக்க வைக்கும். ஆனால் இதை மீறி ஈரானின் ராக்கெட்டுகள் இஸ்ரேலை பதம் பார்த்து உள்ளது. இது சாத்தியமாக காரணம்.. ஈரான் உடனுக்குடன் அதிக அளவில் ஏவுகணைகளை அனுப்பியது. அயர்ன் டோம் தடுக்கும் என்றாலும் 10 நொடிக்கு 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாத.
முக்கியமாக அயர்ன் டோம் முழுமையாக ஏவுகணைகளை பயன்படுத்திய பின் அடுத்த லோடிங் நடக்க 10 நிமிடங்கள் வரை கூட ஆகும். இடைப்பட்ட நேரத்தில் ஏவுகணைகள் வந்தால்.. அதை இஸ்ரேல் தடுக்க முடியாது. இது போன்ற நேரங்களில் இஸ்ரேலின் மற்ற ஏவுகணை தடுப்புகள், அமெரிக்கா அளித்துள்ள ஏவுகணை தடுப்புகள் உதவும். ஆனால் இதை எல்லாம் மீறி இஸ்ரேல் உள்ளே புகுந்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா தெளிவோடு செயல்பட தொடங்கி உள்ளது. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மோதல் தொடர்பாக, அந்த நிகழ்வுகள் குறித்து இன்றுவரை நேரடி அறிக்கைகள் எதுவும் இந்தியா சார்பாக வெளியிடப்பவில்லை. இதுவரை யாருக்கும் இந்தியா நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. கடைசியாக வெளியிடப்பட்ட அறிக்கையும் அமைதியை வேண்டியே இருந்தது.. எந்த நாட்டையும் ஆதரிக்கவில்லை.
ஈரானுக்கு பரம எதிரியாக இருந்த.. சவூதி கூட ஈரானிய இறையாண்மைக்கு ஆதரவாகவே கருத்துக்களை வெளியிட்டு உள்ளது. ஆனால் இதுவரை இந்தியா ஒரு ஸ்டேட்மென்ட் கூட வெளியிடவில்லை. இந்தியா தனது தீவிரவாத குழு பட்டியலில் ஹமாஸைத் தடை செய்யவில்லை. அதே சமயம் ஹமாஸுக்கு ஆதரவாகவும் பேசவில்லை.
இந்தியா எப்போதுமே அணி சேராத நாடாக இருந்தே வந்துள்ளது. போர்களின் போது கருத்து தெரிவிக்கும். ஆனால் இந்தியா எப்போதும் அணி சேராது. அந்த நாட்டுடனும் இணைந்து செயல்பாடு. அல்லது போர் செய்யாது. மோடிக்கு கீழ் இந்தியாவின் கொள்கைகள் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி மாறவில்லை.. இந்தியாவின் அணி சேராத நாடு கொள்கை தொடரும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
இந்தியா ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்தியா இன்னொரு பக்கம் சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் கூட நெருக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் இதுவரை இந்தியா எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எந்த பக்கமும் தலை சாய்க்காமல் கிட்டத்தட்ட இந்திய அரசு உலக நாடுகளை ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்க தொடங்கி உள்ளது.
செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி