இந்தியா-பாக். போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல்: டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சாதூர்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட இருநாடுகளுக்கும் வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா இரவு பகலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.