எச்.ஐ.வி., பரிசோதனை கருவி மருத்துவமனைகளில் பற்றாக்குறை

சென்னை: தமிழகத்தில், எச்.ஐ.வி., பரிசோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச் சங்கத்தினர், அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை திட்ட இயக்குநருக்கு, அச்சங்கத்தின் தலைவர் ஜெயந்தி அனுப்பியுள்ள கடிதம்:
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிரசவம், விபத்து சிகிச்சை, அவசர சிகிச்சை, காசநோய், அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு, எச்.ஐ.வி., பரிசோதனை செய்யப்படுகிறது.
எச்.ஐ.வி., பரிசோதனை செய்வதற்கான உபகரணங்களுக்கு, மூன்று மாதங்களாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமருத்துவ துறையில், மிக மிக அவசியமானதாக கருதப்படும் எச்.ஐ.வி., பரிசோதனை உபகரணங்களின் தட்டுப்பாடு, மருத்துவ சேவையின் வேகத்தை குறைத்து விடும்.
மேலும், பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவதுடன், எச்.ஐ.வி., நோயாளிகளை கண்டறிவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் அதிகமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description