dark_mode
Image
  • Tuesday, 16 December 2025

எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதல்வருக்கு திராணி இருக்கிறதா? என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
 

அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும்.

தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை விட, முதல்வருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.

மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதல்வருக்கு சந்தேகம் தேவையில்லை. ஏனென்றால், அது பிரதமர் மோடியின் வாக்குறுதி.

related_post