'காமராஜருக்கு நிறைய செய்தவர் கருணாநிதி': அமைச்சர் பெரியசாமி

தமிழக அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:
காமராஜர் குடியாத்தம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டபோது, தி.மு.க., போட்டியிடவில்லை. 'பச்சைத்தமிழர் வெற்றி பெற வேண்டும்; முதல்வராக இருக்க வேண்டும்' என, மறைந்த முதல்வர் அண்ணாதுரை கூறினார். காமராஜர் இறந்த பின், அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர் கருணாநிதி.
மகன் கூட தந்தைக்கு இவ்வளவு செய்திருக்க மாட்டார். ஆனால், காமராஜர் மேல் இருந்த பற்றால், அவரை போற்றும் வகையில் கருணாநிதி நிறைய செய்திருக்கிறார்.
அதையெல்லாம் மறைக்க முடியாது. காமராஜர் பிறந்த நாளை கல்வி நாளாக அறிவித்து, அரசு சார்பில் விழா எடுக்கிறோம். அவருடைய புகழை போற்றும் ஒரே இயக்கம் தி.மு.க.,வும், ஸ்டாலினும் தான்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால், உண்மையாகி விடாது.இவ்வாறு அவர் கூறினார்.