சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் "தமிழ் வளர்க" , "தமிழ் வாழ்க" பெயர் பலகை..!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ் வளர்க, தமிழ் வாழ்க என்ற பெயர்ப்பலகை கடந்த பல ஆண்டுகளாக இருந்தது. ஆனால் திடீரென அதிமுக ஆட்சியின் போது அந்த பெயர் பலகை நீக்கப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து மீண்டும் தமிழ் வளர்க, தமிழ் வாழ்க பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடந்த ஆட்சியில் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருந்தது
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதை அடுத்து மீண்டும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ் வளர்க, தமிழ் வாழ்க பெயர் பலகை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்த தகவல் நேற்று வெளியான போது இன்று பெயர் பலகை மீண்டும் சென்னை மாநகராட்சியில் வைக்கப்படும் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தமிழ் வளர்க, தமிழ் வாழ்க பெயர் பலகை சற்றுமுன் நிறுவப்பட்டது. இதனையடுத்து தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description