dark_mode
Image
  • Sunday, 11 May 2025

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது

 

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த

 

தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

 

தமிழக அரசு, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை

துரத்திய அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க கொடி பொருத்திய காரில் சென்ற நபர்கள் மீது தமிழக

அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

இரவு நேரங்களில் காரில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு செய்வது, மிரட்டல் விடுப்பது,

பணம் பறிப்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நேற்று நடந்த சம்பவத்தில், ஆளும் கட்சியின் கொடியுடன் சென்று மிரட்டியது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்ததற்கான எடுத்துக்காட்டு.

பெண்களுக்கு எதிரான போக்கை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தமிழகத்தில் மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு காரணம் டாஸ்மாக் மற்றும்

போதைப்பொருட்கள்.

இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று த.மா.கா(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஜி.கே. வாசன்தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்

comment / reply_from

related_post