பாபநாசம் சட்டமன்ற தொகுதி பாமக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாமக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் குமரேசன், பேரூர் துணைத் தலைவர் வீரையன், பாபநாசம் ஒன்றிய துணை தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாபநாசம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ். வி. சங்கர் தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் சி ஆர். சி. என். ரவீந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற 7. 9. 2022 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவருமான அன்புமணி ராமதாஸ் எம்பி அவர்களை சிறப்பான முறையில் வரவேற்பதற்கு பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பில் 100 இரு சக்கர வாகனங்கள், 50 வேன்களில் சென்று சிறப்பிப்பது எனவும், தொடர் மழையால் விவசாய கூலி தொழிலாளர்களும் மற்றும் கட்டிட கூலி தொழிலாளர்களும் வேலை இன்றி கஷ்டப்படுவதால் குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம் வீதம் இரண்டு மாதங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், மேட்டூர் உபரி நீர் தொடர்ந்து அதிக அளவில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுவதால் திருமானூர்- நீலத்தநல்லூர் வரையிலான கரையினை பலப்படுத்தி உடைப்பு ஏற்படாமல் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பாபநாசம் பேரூர் இளைஞரணி செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.