பாரதியார் பாட்டு ! வெடிக்கும் குண்டுக்கு மத்தியில்... கர்ஜிக்கும் சிங்கமாய் சிவகார்த்திகேயன்! அமரன் டீசர்!
கமல்ஹாசனின், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இப்படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை ஏற்று நடித்திராத, ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. முழுக்க முழுக்க தேச பற்று நிறைந்த படமாக உருவாகியுள்ள இந்த படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
ராணுவ உயர் அதிகாரியாக... சிங்கம் போல் கர்ஜிக்கும் தோரணை கொண்ட வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் சிவர்த்திகேயன். காஷ்மீரில் இந்தியா - இடையே நடக்கும் அதிரடியான போர் காட்சிகள், ஒரு தலைவனாக தன்னுடைய குழுவில் உள்ளவர்களை எப்படி சிவகார்த்திகேயன் ஊக்குவிக்கிறார், என பல்வேறு விஷயங்களை இந்த டீசரில் பார்க்க முடிகிறது. அதே போல் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என பாரதியார் பாடலை பாடி கொண்டு... ராணுவ வீரர்கள் வண்டியில் செல்வது, சிவகார்த்திகேயன் யாரும் முகத்தை மறைக்க கூடாது... இது தான் இந்திய ஆர்மி முகம் என எதிரிக்கு காட்டுங்கள் என கூறுவது... படம் மீதான ஆவலை தூண்டுகிறது.
முகுந்தன் என்கிற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு அமரன் என ஏன் வைக்கப்பட்டுள்ளது, என்கிற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. சற்று முன் வெளியான இந்த டீசர் சில நிமிடங்களையே யூ டியூபில் ட்ரெண்டில் உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description