மடப்புரம் நகை மறைவு வழக்கில் பல மர்மங்கள்! – காவல்துறை நடவடிக்கையில் எதிர்வினைகள் குமிகும்

■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..?
■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..?
■★◆●மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத(?) 3ஆம் நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனது ஏன்..?
■★◆●தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..?
■★◆●காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை..? மற்ற பொருட்கள் எனில் பெண்கள் மறப்பார்கள். கவனமின்மை சாத்தியம். ஆனால், நகையை எப்படி பெண்கள் மறந்தனர்..? அம்மா சிவகாமி கூட ஞாபகப்படுத்தவில்லையா..?
■★◆●அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்..?
■★◆●நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தார்களா..?
■★◆●30கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் (லுங்கி, கோடு போட்ட பேண்ட், டி ஷர்ட், சாதா சட்டை எல்லாம் அணிந்தபடி வந்ததாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்) போலீஸ் தனிப்படை ஒன்று மடப்புரம் கோயிலுக்கு விசாரணைக்கு ஓடி வந்தது ஏன்..?
■★◆●பக்கத்தில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கூட்டிப்போய் விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..?
■★◆●"தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என்கிற பொய் FIR போட்டது ஏன்..? போட ஒப்புக்கொண்டது ஏன்..? (யூனிஃபார்ம் போடாத டி ஷர்ட் அணிந்த ஒருவரின் பிரம்படி வீடியோ வெளியாகி காக்கா வலிப்பு கதை எல்லாம் பொய் என்றாகிவிட்டது).
■உயர் அதிகாரிகளின் உத்தரவின் படிதான் தங்கள் வீட்டுக் காவலர்கள் இதைப்போன்று மனிதமற்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக தர்ணா போராட்டம் செய்கிற கைதான காவலர் குடும்பத்தினர் கூறியுள்ளனர் எனில்... கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் கட்டளை இட்ட குற்றத்திற்காக கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அதிகாரிகள் யார்..?
■இதைவிட அதிகளவில்... 100 பவுன் 200 பவுன்... என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் போலீஸ்...இவர்களின் 10 பவுன் நகைக்காக போலீஸ் இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..?
■இந்த நிகிதா... சிவகாமி இருவரும் யார்..? இவர்களின் பின்னணி என்ன..?!
மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன. வழக்கில் பல மர்மங்கள் விலக வேண்டியுள்ளது.
செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி