"மாபியாக்களால் அயோத்தி நிலங்கள் அபகரிக்கப்படுகிறது"
கடந்த 7 ஆண்டுகளில் மாபியாக்களால் அயோத்தி நிலங்கள் அபகரிக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர். அவரது எக்ஸ் தள பதிவில், ‘சாமானிய மக்களுக்கு கோதுமை மாவு, பருப்புகளின் விலை தெரியும். ஆனால், மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் அயோத்தி நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்று கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து அயோத்தியில் நடக்கும் நிலம் மோசடிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.