வன்னியர்களை வாக்கு வங்கியாகவே பாக்குறாங்க.. திமுக செய்த துரோகம் : மாநாட்டில் அனல் கக்கிய அன்புமணி

பாமக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் எழுச்சி மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் வட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேன், கார்கள், பேருந்துகள் மூலம் பல ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் வருகை தந்து பங்கேற்றுள்ளனர்.
மாநாடு தொடங்கியதும் பாமக நிறுவனர் ராமதாஸ் கொடி ஏற்றி வைத்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, சவுமியா அன்புமணி, திலகபாமா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தை பாமக ஆள வேண்டும் என்பது காடுவெட்டி குருவின் கனவு. அதனை நனவாக்குவது இங்கு வந்துள்ள எனது தம்பிகளின் லட்சியம். இடஒதுக்கீடு கிடைத்து 36 ஆண்டுகள் ஆகியும் வன்னியர் சமூகத்திற்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு, கல்வி கிடைக்கவில்லை. அதனால்தான் ராமதாஸ் கடுமையாக போராடி வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார்.
அதனைக் கெடுக்கும் வகையில் சூழ்ச்சியாளர்கள் நீதிமன்றம் செல்ல, அங்கு நமக்கு எதிரான தீர்ப்பு வந்தது. உச்ச நீதிமன்றம் சென்றபோது உள் ஒதுக்கீடு கொடுக்க எந்தத் தடையும் இல்லை, ஆனால் சரியான தரவுகளோடு கொடுங்கள் என்று சொன்னது. தீர்ப்பு வந்து 1136 நாட்களுக்கு மேலாகியும், வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு தர முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. நாங்கள் நேரில் சந்தித்தபோது உறுதியளித்த முதல்வர், கடைசியாக கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு தர முடியாது, அந்த கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று பொய்யான தகவலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய துரோகம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா? பிறகு எப்படி கலைஞர், எம்ஜிஆர் கணக்கெடுப்பு நடத்தினார்கள்? திமுக ஆட்சியில் அமர வன்னியர் சமூகம்தான் காரணம். திமுகவுக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது வன்னியர் சமூகம்தான். திமுகவுக்கு வன்னியர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும்.