வீட்டு வசதி திட்டங்களில் மைல் கல்லாக நான்கு கோடி வீடுகள்: மோடி உரை

எனக்காக ஒரு வீடு கட்டவில்லை என்றும், ஆனால் நான்கு கோடி மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றினேன் என்றும் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
பிரதமர் மோடி இன்று டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார். அதன் பின்னர், பல கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் ராமலீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "இந்திய பொருளாதாரம் இன்று மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. புதிதாக பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டில், இந்தியா இன்னும் வளர்ச்சி அடையும்.
இந்தியாவை உலகின் மிக பெரிய உற்பத்தி மையமாக இந்த ஆண்டு மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று டெல்லிக்கு முக்கியமான நாள்; வீட்டு வசதி, உள் கட்டமைப்பு, கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.
"எனக்காக ஒரு வீடு கட்டியிருக்கலாம், ஆனால் நான் கட்டவில்லை. அதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு நான்கு கோடி வீடுகள் கட்டி கொடுத்துள்ளேன். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தியாவில் சொந்த வீடுகளை வைத்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக நினைத்து, அதற்காக பணியாற்றி வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது எனது கனவு," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரின் கனவு, அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை விட உயர்ந்ததாக இருப்பதை என்னால் காண முடிந்தது," என்று அவர் கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description