அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஒன்றிய அளவிலான கபாடி மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள்..!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான பாபநாசம் குறுவட்ட மைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்டவர்க்கான மாணவர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டிகளும், மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டிகள் நடைபெற்றன. பாபநாசம் குறுவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளில் இருந்து இப் போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் இடங்களுக்கான நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திக், உடற்கல்வி இயக்குனர் கணேஷ் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமரன், ஜெகதீஸ்வரி, முத்துக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
