dark_mode
Image
  • Wednesday, 17 December 2025

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு.!!!

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு.!!!

இந்திய தொலைத்தொடர்புத்துறை ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி மேற்கூறிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புதிய சிம்கார்டை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ஒருநாள் எஸ்.எம்.எஸ் சேவையை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக சிம்கார்ட்டை மாற்ற விரும்பும் அல்லது சிம்கார்டை அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு மட்டும் 24 மணி நேரத்திற்கு அல்லது சிம் கார்டு வழங்கப்பட்ட ஒரு நாளில் எஸ்.எம்.எஸ் சேவை நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.

இந்த உத்தரவை 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு செய்வதுமூலம் புதிய சிம்கார்டை வாங்குபவர்களின் விவரங்களை மோசடிக்காரர்கள் ஃபிஷ்ஷிங் முறை மூலம் திருடப்படுவது தடுக்கப்படும் என கூறியுள்ளது.

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு.!!!

related_post