கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும்..!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையிலிருந்தே மீளாத இந்தியாவை கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும் என நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை மருத்துவ நிபுணர்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர்.
ஆனால் தொடக்கத்தில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரண தட்டுப்பாடு இருந்தது. தற்போது அவை சரி செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறிவருகின்றனர். அதன்படி 3வது அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில், இந்தியா, அமெரிக்காவையும் விஞ்சி விட்டது. அமெரிக்காவில் 16 புள்ளி 9 கோடி பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அந்த எண்ணிக்கை 17 புள்ளி 2 கோடியாக உள்ளது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description