dark_mode
Image
  • Thursday, 21 August 2025

விஜய் நடிக்கும் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு பீஸ்ட் (BEAST)

விஜய் நடிக்கும்  முதல் பார்வை போஸ்டர் வெளியீடு பீஸ்ட் (BEAST)

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.

நாளை தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

 

விஜய் நடிக்கும்  முதல் பார்வை போஸ்டர் வெளியீடு பீஸ்ட் (BEAST)

related_post