+2 தேர்வுகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சகட்டதால், சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து செய்து உத்தரவிடப்பட்டது. பல்வேறு மாநிலங்களும் மாநில அளவிலான பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக அறிவித்து வருகிறது.
12 ஆம் வகுப்பு தேர்வுகளை பொறுத்த வரையில், அவை மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வது தொடர்பான விஷயங்கள் என்பதால் தமிழக அரசு இந்த விஷயத்தில் ஆராய்ந்து முடிவெடுப்பதாக தெரிவித்து இருந்தது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக முதலில் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்டதை தொடர்ந்து, சட்டமன்ற குழு உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள், மனநல ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று முதல்வரிடம் தெரிவித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
சட்டமன்ற குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலம் என்பதால்,எதிர்கால பிரச்னையை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தன. பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இன்று மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான கருத்துக்களின் அறிக்கையை சமர்ப்பித்து இருந்தார்.
இந்நிலையில், பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description