தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என இன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
அரசு தரப்பில் ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவர்கள் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும்
அதேபோல் கைது செய்யப்பட்ட 9 பேரும் திருமணம் ஆகாதவர்கள், வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள் என்ற காரணங்களை மேற்கோள் காட்டி தண்டனை குறைத்து வழங்க வேண்டும் என்று எதிர் தரப்பு வாதம் செய்தது.
9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
இந்நிலையில் தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டது. இதில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
தண்டனை விவரங்கள்
வழக்கின் முதல் குற்றவாளிக்கு சபரி ராஜன் 4 ஆயுள் தண்டனை வழங்க்பபட்டுள்ளது. 2-வது குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5-வது குற்றவாளி மணிவண்ணனுக்கும் 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏ 3 சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை, ஏ 4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 6, 8 மற்றும் 9-வது குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏ 7 குற்றவாளி ஹேரோன் பாலுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
A1 சபரிராஜன்- 4 ஆண்டுகள்
A2 திருநாவுக்கரசர்- 5 ஆண்டுகள்
A3- சதீஷ் மூன்று ஆண்டு
A4- வசந்தகுமார் இரண்டு ஆண்டுகள்
A5 மணிவண்ணன் ஐந்து ஆண்டுகள்
A6 பாபு ஒரு ஆண்டு
A7 ஹெரன்பால் மூன்று ஆண்டு
A8 அருளானந்தம் ஒரு ஆண்டு
A9 அருண்குமார் ஒரு ஆண்டு
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு
9 பேரும் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொருவருகும். 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description