dark_mode
Image
  • Tuesday, 09 September 2025

ஜாதியுடன் ஈ.வெ.ராமசாமி; முதல்வர் படத்தால் சர்ச்சை

ஜாதியுடன் ஈ.வெ.ராமசாமி; முதல்வர் படத்தால் சர்ச்சை

லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட படம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார். அங்கு அம்பேத்கருடன், ஈ.வெ.ராமசாமி உரையாடும் புகைப்படத்தை பார்வையிட்டார். அந்த படத்தை, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு,'இந்தியாவில் ஜாதியால் ஒடு க்கப்பட்ட இளைஞர், அறிவின் வாயிலாக உயர்ந்து, லண்டனில் மரியாதை பெற்றார். அம்பேத்கர் இல்லத்தில் வியப்பும், மரியாதையும் கலந்த உணர்வு ஏற்பட்டது' என குறிப்பிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்த புகைப்படத்தின் கீழே, பட விளக்கத்தில், 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'ஜாதியால் ஒடுக்கப்பட்ட அம்பேத்கருடன், ஜாதியை விட முடியாத ஈ.வெ.ராமசாமி, எப்படி சமூக நீதியை காப்பாற்றுகிறார்'' என, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

related_post