dark_mode
Image
  • Wednesday, 17 December 2025

பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த சென்னை மாநகராட்சி

பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த  சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னைகு உட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறியுள்ளதாவது:

கொரொனா தொற்று பரவும் அபாயுமுள்ளதால், சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது நிகழ்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதைத்தாண்டி யாராவது நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 188 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த  சென்னை மாநகராட்சி

related_post