dark_mode
Image
  • Sunday, 25 May 2025

மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்காக வகுப்பில் ஸ்கர்ட் அணிந்து ..!

மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்காக வகுப்பில் ஸ்கர்ட் அணிந்து ..!

ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்பெயினில் உள்ள பில்போ என்ற நகரில், கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி, மைக்கேல் கோமஸ் என்ற மாணவர், வகுப்பறைக்கு மாணவிகள் அணியும் ஸ்கர்ட் அணிந்து வந்தார். இதனால் கோபமடைந்த பள்ளி நிர்வாகம், மாணவனை பள்ளியில் இருந்து வெளியேற்றியது. பின்னர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறவும் வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவன் தனக்கு நேர்ந்த விஷயத்தை வீடியோவாக வெளியிட்டார். அப்போதிருந்து, ஆடைகளுக்கு பாலின பாகுபாடு இல்லை என்ற பிரச்சாரம் ஸ்பெயினில் தொடங்கியது.

சமீபத்தில் வல்லாடோலிட் பகுதியை சேர்ந்த மானுவேல் ஆர்டேகா, போர்ஜா வேலாஸ்குயஸ் ஆகிய ஆசிரியர்கள், வழக்கமாக அணியும் பேன்ட், சர்ட் அணியாமல் ஸ்கர்ட் அணிந்து வகுப்பில் பாடம் எடுத்துள்ளனர்.

அவர்கள் பாடம் எடுக்கும் பள்ளியில் மாணவன் ஒருவன் டிசர்ட் அணிந்ததற்காக, கேலி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதை அடுத்து மாணவர்களிடையே சகிப்புத் தன்மையை அதிகரிக்க, இவ்வாறு ஸ்கர்ட் அணிந்து பாடம் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்காக வகுப்பில் ஸ்கர்ட் அணிந்து ..!

comment / reply_from

related_post