ஹில்ப்-உத்-தாஹிரிர் அமைப்பிற்கு தடை.. மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக ஹில்ப்-உத்-தாஹிரிரை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், இந்த ஹில்ப்-உத்-தாஹிரிர் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, ஹில்ப்-உத்-தாஹிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாதத்தை பயன்படுத்தியது தெரிய வந்ததால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்கும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய அரசு தனது விளக்கத்தில் கூறியுள்ளது. உலகின் பல நாடுகள் இந்த முறையை தடை செய்துள்ள நிலையில், தற்போது இந்திய அரசும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருப்பதும் இந்த விவகாரத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description