பெங்களூரு மாநகரப் பேருந்து சேவை: 10 வருஷத்துல இதுதான் முதல்முறை- பயணிகள் பெருமூச்சு!

பெங்களூருவில் அரசு பேருந்து சேவையை மாநகரப் போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது. தற்போது டீசல் மற்றும் எலக்ட்ரிக் பேருந்துகள் என 6,835 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு பெறுவது நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் போக்குவரத்து கழகங்களுக்குள் நடைபெறும் பணியிடமாற்றம் காரணமாக காலியிடங்கள் ஏற்பட்டன. அதற்கேற்ப புதிதாக ஆட்கள் தேர்வு என்பது அவசியம்.
பெங்களூரு போக்குவரத்து கழக நெருக்கடி
பேருந்து ஊழியர்கள் பற்றாக்குறை
போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க முடியவில்லை. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. அதுமட்டுமின்றி ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது பணியில் இருப்பவர்கள் வேலை நேரத்தை தாண்டி 4 முதல் 5 மணி நேரம் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியானோரை பணியில் அமர்த்தி கர்நாடகா மாநில போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிரடி
இதுதொடர்பான அரசாணையை நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடி, ஊழியர்கள் நியமனத்திற்கு அரசு விதித்த தடை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து எலக்ட்ரிக் பேருந்துகளை லீசுக்கு எடுத்தல் போன்ற காரணங்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை.தனியார் வசம் எலக்ட்ரிக் பேருந்துகள்
தனியாரிடம் லீசுக்கு விட்டு விட்டால் எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் அவற்றுக்கு தேவையான ஒட்டுநர்கள், தொழில்நுட்ப ஊழியர்களை அவர்கள் தான் நியமிக்க வேண்டும். நடத்துநர்களை மட்டும் பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்யும் என்றார். அதன்படி, 2,286 புதிய நடத்துநர்கள் நடப்பாண்டு பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description