📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 05-01-2022 புதன்கிழமை

தினந்தோறும் குர்ஆன் வசனம் 📚
اعوذ بالله من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۙ
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,
(அல்குர்ஆன் : 79:6)
تَتْبَعُهَا الرَّادِفَةُ
(மென்மேலும்) அதனைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).
(அல்குர்ஆன் : 79:7)
قُلُوْبٌ يَّوْمَٮِٕذٍ وَّاجِفَةٌ ۙ
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.
(அல்குர்ஆன் : 79:8)
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۘ
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.
(அல்குர்ஆன் : 79:9)
தொடர்
தினம் ஓர் ஹதீஸ் 📚
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப்பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகம் அற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 63.
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
