11 மாவட்டங்களில் இன்று கன மழை

கோவை, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட, 11 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 22 வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் மிதமான அல்லது கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.