GST குறைக்கப்படும்..! மக்களுக்கு என்னோட தீபாவளி பரிசு இது.. மோடி சர்ப்ரைஸ் பேச்சு

இன்று செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின உரையில், மறைமுகமாக வரி விஷயத்தைக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. நம் சொந்தத் திறனையும் வளங்களையும் நம்பலாம். டாலர், பவுண்டை மட்டும் நம்ப வேண்டியதில்லை. போர் விமானங்களின் எஞ்சின்களை இங்கேயே தயாரிப்போம். சைபர் பாதுகாப்பிலும் தன்னிறைவு அடைவோம். கோவிட் தடுப்பூசி மூலம் கோடிக்கணக்கானோரைக் காப்பாற்றியுள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் அற்புதங்களைச் செய்துள்ளன.
இளைஞர்களே, புதிய யோசனைகளுடன் வாருங்கள், உங்களுக்கு இங்கே பெரிய இடம் உள்ளது. சமூக ஊடகத் தளங்களை இங்கேயே உருவாக்க வேண்டும். வெளிநாட்டுத் தளங்களை ஏன் நம்ப வேண்டும்? நம் சொந்த ஆயுதங்களால் எதிரியைத் தோற்கடித்த நாம், நம் திறனில் நம்பிக்கை வைக்கலாம். சுதேசி மந்திரத்தை உச்சரிப்போம். நீண்ட காலம் அரசாங்கத்திற்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவின் வளர்ச்சிதான் இலக்கு. யாரையும் கீழே தள்ளுவது அல்ல.
வரிச் சுமையிலிருந்து நடுத்தர மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. உலகச் சந்தையை இந்தியா கட்டுப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. தேவையற்ற சட்டங்களை நீக்கி மக்களைச் சிறையில் அடைப்பதைத் தவிர்த்துள்ளோம். சட்டத் துறையிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். அடுத்த கட்டமாக, தீபாவளிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரும். தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் இருக்கும். ஜிஎஸ்டி விகிதங்கள் குறையும். பொருட்களின் விலை குறையும். நடுத்தர மக்களின் வாழ்க்கை இன்னும் எளிதாகும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.