நீதித்துறையை விமர்சித்த புகார்: சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

நீதித்துறையை விமர்சித்த புகாரில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2024 நவம்பரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளிக்கும்போது, நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அதன் செயல்பாடுகளை விமர்சித்து பேசியதாக, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை எழும்பூர்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எழும்பூர் கோர்ட் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
எழும்பூர் கோர்ட் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குபதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.