dark_mode
Image
  • Saturday, 10 May 2025

தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!

தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!

ஜெருசலேம்: ''அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்'' என இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் இன்னும் முடிந்தபாடில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி தரும் வகையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான ஹவுதி பயங்கரவாத படையினர், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, ஏமனிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இதற்கு, ஏழு மடங்கு பதிலடி தரப்படும் என, இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பெரும் தாக்குதல் நிச்சயம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து இருந்தார். இந்நிலையில், ''அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்'' என இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசிர்சாதே கூறியதாவது: அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஈரான் பதிலடி கொடுக்கும். இந்தப் போரை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தொடங்கினால், ஈரான் அவர்களின் தளங்கள் மற்றும் படைகளை எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் குறிவைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

comment / reply_from

related_post