ரோடு ஷோ என்ற பெயரில் ஸ்டாலினின் ஏமாற்று ஷோ: நாகேந்திரன்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், சுங்கச்சாவடி கட்டணத்தைக் கூட ஒழுங்காக செலுத்தவில்லை. அரசு பேருந்துகள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பிரச்னை ஐகோர்ட் வரை சென்றுள்ளது.
பல கோடி ரூபாய் பாக்கியை செலுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, டீசல், பெட்ரோல் போட்டு விட்டு அதற்கான பணத்தையும் கொடுக்காமல் உள்ளனர்.
இதையெல்லாம் பார்த்து சரி செய்யாமல், முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ என ஏமாற்று ஷோ நடத்திக் கொண்டிருக்கிறார்.
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கைகோர்த்த நாளில் இருந்தே, முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
அதனால் தான், ஓரணியில் தமிழ்நாடு என்றெல்லாம், புரியாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சித் தலைவர்களும் அப்படியே பேசுகின்றனர்.