dark_mode
Image
  • Sunday, 11 May 2025

#Coolie திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திர பெயரை அறிவித்தது படக்குழு!

#Coolie திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திர பெயரை அறிவித்தது படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' திரைப்படத்தில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய அப்டேட்டாக கதாபாத்திர அறிமுகங்கள் குறித்து போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திராவின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன. இறுதியாக, நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனம் ரஜினியின் போஸ்டருக்கு முன், கூலியில் அவர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? என ரசிகர்களிடம் கேள்வி கேட்ட கொஞ்ச நேரத்தில் ரஜினியின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

Image

#Coolie திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திர பெயரை அறிவித்தது படக்குழு!

comment / reply_from

related_post