காலை உணவு திட்டம் முதல் சட்ட ஆலோசனை மையம் வரை.. இதுதான் தவெக - லிஸ்ட் போட்ட ஆனந்த்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிறந்த நாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மக்களுக்காக பணியாற்றி வரும் இந்த இயக்கம், தலைவர் பிறந்த நாளை ஒரு நாள் மட்டும் அல்ல, 365 நாளும்தலைவர் பிறந்த நாளை கொண்டாடக்கூடிய கட்சி தமிழக வெற்றி கழகம், ஏனென்றால் நாள்தோறும் மக்களின் தேவைகளை அறிந்து மக்களோடு மக்களாக சேர்ந்து சேவை செய்து வருகிறது என்று கூறினார்.
காலை உணவு திட்டம்:
மேலும் இந்தக் கழகம், மக்களது தேவைகளை நேரடியாக அறிந்து, நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைமுன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று துறைமுக தொகுதியில் 14 பேருக்கு தலா ₹35,000 முன்பணமாகக் கொடுத்து ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தினமும் தங்கள் உழைப்பால் வாழக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் பல்வேறு மாவட்டங்களில் பல ஆண்டுகளாகவே காலை உணவு திட்டம், சட்ட ஆலோசனை மையங்கள், தொழில் பயிற்சி மையங்கள், வீடு கட்டும் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இவை அனைத்தும் தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக மக்கள் சேவை:
மேலும் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, சாதாரண உறுப்பினர்களும் தங்களுடைய பாசத்தாலும், தலைவர் மீது உள்ள அன்பாலும் பல ஆண்டுகளாக மக்கள் சேவைகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து மக்கள் சேவையில் செயல்பட்டு வரும் எங்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு எங்களை வழிநடத்தும் தலைவர் ஒருவர் இருக்கிறார் .அவர்தான் எங்கள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் எங்கு சென்றாலும், எங்கள் கட்சியின் கொடியைப் பார்த்தாலே போதும் மூன்று வயது குழந்தைக்கும் தெரிந்துவிடும் இது தவெக கட்சி. அந்த அளவுக்கு மக்கள் மனதில் எங்கள் தலைவர் மற்றும் கட்சி உறைந்திருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. இது எங்களுக்கு கடவுள் தரும் ஒரு பெரிய வரமாகவே நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினார்.
இப்போது மக்கள் எங்களை நேசிக்கிறார்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் . இவர்கள் தான் நல்ல ஆட்சி தரக்கூடியவர்கள்” என்று அவர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள்.இந்த நம்பிக்கைக்கு நாங்கள் நிச்சயமாக நன்றி செலுத்த வேண்டும். 2026ல் எங்கள் தலைவர் தளபதி விஜய் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description