த.வெ.க.வின் கொடி வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – கொண்டாட்டத்தில் தொண்டர்கள் !

சிவப்பு ,மஞ்சள் நிறத்தில் கொடியை பயன்படுத்த தவெகவிற்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி தொண்டை மண்டலச் சான்றோர் தர்மப் பரிபாலனச் சபையின் நிறுவனர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்கள் தொண்டை மண்டலச் சான்றோர் தர்மப் பரிபாலனச் சபையின் கொடியின் நிறத்தைப் போன்ற உள்ளது. முதலில் இந்தக் கொடியை நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். இதனால் தொண்டர்களுக்குள் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழகப் பத்திரப்பதிவு மூலம் அதிகாரப் பூர்வமாகக் கட்சியின் கொடி வெளியிடப்பட்டது.