பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடு: ஓவைஸி சாடல்

கிஷன்கன்ஜ்: பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடு. அந்நாடு, இந்தியாவை அமைதியாக வாழ விடாது என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறியுள்ளார்.
பீஹாரின் கிஷன்கன்ஜ் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓவைஸி பேசியதாவது:
வெளியாட்கள் இந்தியாவிற்குள் நுழைந்து அப்பாவி மக்களின் உயிரை பறிக்க உரிமையில்லை. இதனை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகள் நமது மக்களை கொல்கின்றனர்.
இதுபோன்று பாகிஸ்தான் மீண்டும் செய்யாதவாறு மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தானின் கப்பல் மற்றும் விமானங்களுக்கு தடை விதிக்க மோடி அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், எப்ஏடிஎப் அமைப்பில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானை விட இந்தியா எப்போதும் வலிமையான நாடாக திகழும். பாகிஸ்தானில் வாழும் பழங்குடியினர் மத்தியில் அமைதியை பாகிஸ்தானால் ஏற்படுத்த முடியவில்லை. அதன் அண்டை நாடுகான ஈரான் மற்றும் பாகிஸ்தானுடன் சுமூகமான உறவை பாகிஸ்தானால் ஏற்படுத்த முடியவில்லை.
1947 ல் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். அது, இந்தியா எப்போதும் எங்கள் நிலமாக இருக்கும் என்பதே அது என்பதை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். பாகிஸ்தானில் முட்டாள்தனமான விஷயங்களை கக்கும் நபர்கள் இஸ்லாம் என்பது குறித்து புரிந்து கொள்ளவில்லை. நீங்கள், வறுமையில் வாடும் நாட்டில் வசிக்கின்றீர்கள். உங்களுக்கு ஆப்கன், ஈரானுடன் மோதல் உள்ளது. பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடு. அங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள், இந்தியாவை அமைதியாக இருக்க விட மாட்டார்கள். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.
வங்கதேசத்தில் முட்டாள்தனமாக பேசுபவர்களுக்கு, உங்களுக்கு கிடைத்த நாடு எங்களால் வழங்கப்பட்டது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் அளவுக்கு ஏவுகுணைகளை சோதித்துப் பாருங்கள். ஆனால், இந்தியா எப்போதும் உங்களை விட சக்திவாய்ந்த நாடாகவே இருக்கும். இந்தியாவில், ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க முயற்சிப்பவர்கள், நாட்டை பலவீனப்படுத்துகீறார்கள் என்பது அர்த்தம். இவ்வாறு ஓவைஸி பேசினார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description