dark_mode
Image
  • Thursday, 21 August 2025

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
பெண் கொலை பற்றி அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் ஒரே ஊரை சேர்நத இருதரப்பு மோதல் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுகவினர் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்று அடித்துக் கொன்று விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

அந்த கொலைக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கடலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த கொலையில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசி இருந்ததால் திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் கொடுத்த புகாரின் கீழ் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

:விஜய் மாதிரி இருக்கணும்னு நினைக்கல.. என் கிட்ட வண்டி இல்ல - நடிகர் விஷால்

ஏற்கனவே இதுபோன்று தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியதாக வட இந்தியர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

related_post