dark_mode
Image
  • Saturday, 10 May 2025

வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு!

வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு!
ன்று முதல் தேதி அதுவுமாக அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து வணிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக உணவகங்கள், தேநீர் கடைகள், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இந்த மாதமும் உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.48 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

 

கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. செப்டம்பர் மாதமும் சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

 

அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

இதேபோல் மற்ற மெட்ரோ நகரங்களிலும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் 1,694 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1,804 ரூபாயாகவும், மும்பையில் 1,646 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு!

comment / reply_from

related_post