dark_mode
Image
  • Saturday, 10 May 2025

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!
பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியா “ஆபரேஷன் சிந்துர்” எனப்படும் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், பஹாவல்பூர், முத்திர்கே உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியது.
 
 
இந்த நடவடிக்கைக்கு பிறகு  பல விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
 
ஏர் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சந்திகர், ராஜ்கோட் ஆகிய 9 நகரங்களுக்கு செல்லும் மற்றும் வருகிற விமானங்கள் இன்று  மதியம் 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலவரத்தை பொறுத்து இது நீடிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
ஸ்பைஸ் ஜெட் பயணிகளை விமான நிலையங்களுக்கு செல்லும் முன் தங்களது விமான நிலவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
 
ஸ்ரீநகர் விமான நிலையம் இன்று முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது.
 
கட்டார் ஏர்வேஸ் போன்ற சில சர்வதேச விமான நிறுவனங்களும் பாகிஸ்தான் வான்வழி மூடலால் தற்காலிக மாற்றங்களை செய்துள்ளன. பயணிகள் தங்களது பயண திட்டங்களை மாற்றி அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

comment / reply_from

related_post