பஹல்காம் சம்பவம் எதிரொலி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாக வாய்ப்பு

புதுடில்லி; பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள உறவுகள் சீராக இல்லை. எந்நேரமும் போர் மூளும் என்றும், பாகிஸ்தானின் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக போர் தான் தீர்வு என்றும் பலவித கருத்துகள் நிலவுகின்றன.
இவ்விரு நாடுகளின் அரசியல் நகர்வுகளை உலக நாடுகள் உற்றுபார்த்து வருகின்றன. இந் நிலையில் முக்கிய நகர்வாக இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 ஒத்தி வைக்கப்படலாம் என்று தகவல்கள் எழுந்துள்ளன. காரணம் இந்த தொடரில் பாகிஸ்தானும் கலந்து கொள்வது தான்.
அரசியல் சூழல் சுமூகமாக இல்லாத தருணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடாது, போட்டி தொடர் ஒத்தி வைக்கப்படவே அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆசியகோப்பை போன்றே இந்தியா, வங்கதேசம் இடையேயான தொடரும் தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.
பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description