dark_mode
Image
  • Thursday, 21 August 2025

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!
ஸ்பெயின் உள்பட ஐந்து நாடுகளுக்கு திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது இந்த குழு நாடு திரும்பியுள்ளது. இதனை அடுத்து சென்னை திரும்பிய கனிமொழி, “உலக நாடுகளின் ஆதரவை இந்தியாவுக்காக திரட்டி வந்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
 
 
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு, உலக நாடுகளிடம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை அம்பலப்படுத்துவதற்காக ஏழு எம்பிக்கள் தலைமையிலான அனைத்து கட்சி குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒன்று கனிமொழி தலைமையிலான குழு என்பதும், இந்த குழு ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இன்று இந்தியா திரும்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து சென்னை திரும்பிய கனிமொழி, செய்தியாளர்களிடம் பேசிய போது, “பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் சென்ற ஒவ்வொரு நாடும் புரிந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு அனைத்து நாடுகளும் துணை நிற்கின்றன,” என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
“இந்தியாவுக்காக உலக நாடுகளின் ஆதரவை பெற்று திரும்பி உள்ளோம்,” என்று கனிமொழி, கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

related_post