dark_mode
Image
  • Thursday, 21 August 2025

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு!

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு!

நாகலாந்து ஆளுநர் இல கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று மாலை 6.26 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக அவர் பதவி வகித்து வந்தார்.

1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார்.தமிழ்நாட்டில் பாஜகவிற்கு அடித்தளம் அமைத்தவர் இல கணேசன். மிக இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு இந்துத்துவ பணியை மேற்கொண்டு வந்தார்.

திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையிலேயே தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வந்தார். தனது பணியை திறந்து விட்டு முழு நேர ஆர் எஸ் எஸ் செயல்பாட்டாளராக பணியாற்றி வந்தார்.
 

related_post