dark_mode
Image
  • Thursday, 21 August 2025

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
மதுரை–தூத்துக்குடி சாலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பகுதியில் எந்தவிதமான பராமரிப்பு பணியும் செய்யவில்லை என்றும், சாலைகள் கொண்டும் குழியுமாக இருக்கும் நிலையிலும் சுங்கக் கட்டணம் வாங்குவது முறையல்ல என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
 
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், எலியார்பத்தி சுங்கச்சாவடி, புதூர், பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று இடைக்கால தடையும் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

related_post