வாட்ஸ்-ஆப்பில் பரவியது தவறான செய்தியாம்: தமிழக காவல்துறை அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்-ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம்.
அதுபோலவே தவறான செய்திகள் பரப்பப்படுவதும் அதிகம்.
அந்த வகையில், அண்மைக் காலமாக வாட்ஸ்-ஆப்பில் பரவிய ஒரு தகவல்தான்,
பெண்கள் தனியாக ஆட்டோவிலோ அல்லது காரிலேயே பயணம் செய்வதற்கு முன் என்று ஆரம்பிக்கும் இந்த செய்தி.
இந்தத் தகவலை வாட்ஸ்ஆப்பில் பார்க்காத அல்லது பகிராத நபர்களே இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த செய்தியின் முக்கியத்துவம் அப்படி. ஆனால், அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ளாமலேயே, நமது கைக்கு வந்ததை பலருக்கும் அனுப்பி, இந்த சதிக்கு நாமும் நம்மையறியாமலேயே உடந்தையாக இருந்து விடுகிறோம்.
வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தத் தகவல் தவறானதாம். இதில் உண்மையில்லை என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
அதற்கு மாற்றாக வேறொரு உபாயத்தையும் அது அளித்துள்ளது. அதுதான் இந்த தகவல்.
தயவு கூர்ந்து சரியான தகவல்களை பகிர முடியாவிட்டாலும் பரவாயில்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம். அது மிகச் சிக்கலான நேரத்தில், சிக்கலை மிகவும் சிக்கலாக்கிவிட நேரிடலாம். அதற்கு எந்த வகையிலும் நாம் காரணமாக இருக்க வேண்டாம்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description