விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். தற்போது விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து, 18-ம் தேதிக்கு (திங்கள் கிழமை) மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி செப். 18ம் தேதி கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, பல்வேறு கோயில்களின் தலைமை தெரிவித்திருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
"செப்டம்பர் 17, 2023 தேதியை விநாயகர் சதுர்த்திக்கான பொது விடுமுறை நாளாக 1881 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் கீழ் அறிவித்தது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பல்வேறு கோயில் தலைவர்களின் அறிக்கையின்படி, "விநாயகர் சதுர்த்தி 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை)க்குப் பதிலாக 18.09.2023 (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பரிசீலித்த அரசு, 1881, பேச்சுவார்த்தைக்குட்பட்ட சட்டத்தின் கீழ், 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18.09.2023 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி, பின்வரும் அறிவிப்பு 01.09.2023 தேதி கூடுதல் அரசாணையில் வெளியிடப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description